பதிவு செய்த நாள்
06 ஆக2014
06:12

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வு கொள்கையை வெளியிட்டது. அதில், முக்கிய கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாமல், வங்கிகளின் எஸ்.எல்.ஆர்., விகிதத்தை மட்டும், 0.50 சதவீதம் குறைத்தது.இதனால், வங்கிகளிடையே பணப்புழக்கம் அதிகரித்து, கடன் வழங்கும் நடவடிக்கைகள் சூடுபிடிக்கும் என்ற நிலைப்பாட்டால், பங்கு வியாபாரம் விறுவிறுப்படைந்தது. மேலும், சாதகமான ஐரோப்பிய சந்தை நிலவரங்களும், வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்தது.
நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது.இருப்பினும், பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் மட்டும் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 184.85 புள்ளிகள் அதிகரித்து, 25,908.01 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 25,928.32 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 25,562.36 புள்ளிகள் வரையிலும் சென்றது. ‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மகிந்திரா, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஹீரோ மோட்டோகார்ப், என்.டி.பி.சி., உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 62.90 புள்ளிகள் உயர்ந்து, 7,746.55 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|