பதிவு செய்த நாள்
06 ஆக2014
12:18

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சாதனமான வோடபோன், பல்வேறு அம்சங்களுடன் தஞ்சை, கும்பகோணத்தில் குளோபல் டிசைன் ஸ்டோரை துவங்கியுள்ளது. ஸ்மார்ட் போன்கள், மொபைல் இன்டர்நெட் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. இதை அடிப்படையாக வைத்து இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் சார்பில் கும்பகோணத்தில் உலகத்தரத்துடன் குளோபல் டிசைன் ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி தஞ்சாவூரில், கலைஞர் கருணாநிதி சாலை, கோர்ட் சாலையில் வோடபோனின் குளோபல் டிசைன் ஸ்டோர் செயல்படத் தொடங்கியுள்ளது. கும்பகோணத்தில் எண் 2, 3, லட்சுமி விலாஸ் தெரு, கும்பகோணம் என்ற முகவரியில் வோடபோனின் குளோபல் டிசைன் ஸ்டோர் செயல்படத் தொடங்கியுள்ளது. வோடபோனின் "நாளைய சில்லறை வர்த்தகம்" தத்துவத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு ஈடுஇணையற்ற சேவை வழங்கும் வகையில் புதிய ஷோரூம் செயல்படும்.
இதுகுறித்து வோடபோன் இந்தியா, தமிழ்நாடு- சென்னை பிராந்திய வர்த்தகத் தலைவர் அபூர்வா மெஹ்ரோத்ரா கூறியபோது, "நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டே மேற்கொள்கிறோம். புதுமையான சிந்தனைகள், தயாரிப்புகள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் வோடபோன் முன்னோடியாகத் திகழ்கிறது. ஸ்மார்ட் போன்கள், மொபைல் இன்டர்நெட் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சில்லறை வர்த்தகத்தில் புதுமையான திட்டத்தை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளோம். குளோபல் டிசைன் ஸ்டோர் எளிமையான வடிமைப்பு, ஊழியர்களின் அன்பான உபசரிப்பு ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கிடைக்கச் செய்யும். இங்கு அனைத்து சேவைகளும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும்." என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|