பதிவு செய்த நாள்
06 ஆக2014
16:53

மும்பை : கடந்த இரு தினங்கள் ஏற்றத்தில் இருந்த பங்குசந்தைகள், இன்று(ஆகஸ்ட் 6ம் தேதி) சரிவில் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததாலும் இந்திய பங்குசந்தைகள் நாள் முழுக்க சரிவில் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 242.74 புள்ளிகள் சரிந்து 25,665.27-ஆகவும், தேசிய பங்குசந்தையான நி்ப்டி 74.50 புள்ளிகள் சரிந்து 7,642.05-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 23 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக எஸ்பிஐ., ஐசிஐசிஐ., ஆக்சிஸ், எச்டிஎப்சி., உள்ளிட்ட வங்கி துறை பங்குகளும், உலோக பங்குகளும் சரிந்தன. அதேசமயம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பெல், ஹீரோ மோட்டோ கார்ப், இந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|