பதிவு செய்த நாள்
07 ஆக2014
01:27
சென்னை: ‘‘நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின், நிகர லாபம், 99 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,’’ என, அந்த வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான காமகோடி, சென்னையில், நேற்று, தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:சிட்டி யூனியன் வங்கியின், மொத்த வணிகம், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 38,536 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதில், வங்கி திரட்டிய டிபாசிட், 22,383 கோடி ரூபாய்; வழங்கிய கடன்கள், 16,153 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இதே காலத்தில், வங்கியின் மொத்த லாபம், 172.69 கோடி ரூபாயாகவும், நிகர லாபம், 99.49 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.தற்போது, வங்கிக்கு, 426 கிளைகள்; 977 ஏ.டி.எம்.,கள் உள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|