பதிவு செய்த நாள்
07 ஆக2014
01:30

மும்பை :நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, சென்ற ஜூலையில், 37 சதவீதம் சரிவடைந்து, 1,15,094 டன்னாக சரிவடைந்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 1,82,133 டன்னாக அதிகரித்து காணப்பட்டது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சோயா விலைஉள்நாட்டு சந்தையில், சோயா விலை உயர்ந்ததையடுத்து, எண்ணெய் ஆலைகள், இதன் பயன்பாட்டை குறைத்து கொண்டன. இதன் காரணமாக, ஒட்டுமொத்த அளவில், புண்ணாக்கு ஏற்றுமதி சரிவை கண்டுள்ளது.
குறிப்பாக, மதிப்பீட்டு மாதத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 1.07 லட்சம் டன்னிலிருந்து, 6,635 டன்னாக மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போன்று, ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதியும், 25,171 டன்னிலிருந்து, 20,722 டன்னாக சரிவடைந்துள்ளது.அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 40,902 டன்னிலிருந்து, 87,637 டன்னாக உயர்ந்துள்ளது.கடந்த ஜூன் மாதத்தில், 696 டாலராக இருந்த ஒரு டன் சோயா புண்ணாக்கின் விலை, ஜூலையில், 652 டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போன்று, ஒரு டன் கடுகு புண்ணாக்கின் விலையும், 6 சதவீதம் குறைந்து, 267 டாலரிலிருந்து, 251 டாலராக சரிவடைந்துள்ளது.
தென் கொரியா:நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 31 சதவீதம் சரிவடைந்து, 7,21,577 டன்னாக குறைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 10,38,819 டன்னாக உயர்ந்து காணப்பட்டது.தென் கொரியா தவிர்த்து, ஈரான், தாய்லாந்து, வியட்னாம், தைவான், இந்தோனேஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்தியாவிலிருந்து புண்ணாக்கு இறக்குமதி செய்வதை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்து கொண்டுள்ளன.
கண்ட்லா:குறிப்பாக, சென்ற ஜூலை மாதத்தில், தென்கொரியாவிற்கான, இந்தியாவின் புண்ணாக்கு ஏற்றுமதி, 3,25,768 டன்னிலிருந்து, 3,41,548 டன்னாக அதிகரித்துள்ளது. இதில், கடுகு புண்ணாக்கின் பங்களிப்பு, 1,71,572 டன்னாகவும், ஆமணக்கு புண்ணாக்கின் பங்களிப்பு, 1,68,562 டன்னாகவும், சோயா புண்ணாக்கின் பங்களிப்பு, 1,414 டன்னாகவும் உள்ளன.அதேசமயம், ஈரான் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 3,63,744 டன்னிலிருந்து, 1,12,275 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.நம் நாட்டிலிருந்து, புண்ணாக்கு ஏற்றுமதி செய்வதில், கண்ட்லா துறைமுகத்தின் பங்களிப்பு, 76 சதவீதமாக உள்ளது. இதையடுத்து, மும்பை, முந்த்ரா துறைமுகங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|