பதிவு செய்த நாள்
07 ஆக2014
01:31

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மதியத்திற்கு பின் திடீர் சுணக்கம் கண்டது.சாதகமற்ற சர்வதேச நிலவரங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், கடந்த இரண்டு தினங்களாக, ஏற்றம் கண்டு வந்த பங்கு சந்தை, நேற்று சரிவுடன் முடிவடைந்தது.நேற்றைய வியாபாரத்தில், வங்கி மற்றும் உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் முறையே, 1.82 சதவீதம் மற்றும் 1.94 சதவீதம் சரிவை கண்டன. இவை தவிர, ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு, மருந்து, நுகர்பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும் தேவை மிகவும் குறைந்து காணப்பட்டது.
அதேசமயம், தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் மட்டும் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 242.74 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 25,665.27 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.டி.சி., சேசா ஸ்டெர்லைட், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், இன்போசிஸ், இந்துஸ்தான் யூனிலிவர், பெல் உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 74.50 புள்ளிகள் சரிவடைந்து, 7,672.05 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|