பதிவு செய்த நாள்
07 ஆக2014
10:48

செக் குடியரசு நாட்டை, தலைமையகமாக கொண்டு செயல்படும் ஸ்கோடா கார் நிறுவனம், வோல்ஸ்வாகன் குழுமத்தை சேர்ந்தது. இந்தியாவில், இந்த நிறுவனம், 2001 நவம்பர் முதல், ‘ஸ்கோடா ஆட்டோ இந்தியா’ என்ற பெயரில், கார் உற்பத்தி மற்றும் விற்பனையை துவக்கியது.
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்கபாத்தில், இந்நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. ‘சூப்பர்ப், ஆக்டோவியா, பாபியா, யெடி, ரேபிட்’ என, ஐந்து மாடல் கார்களை, இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தின், புதிய கார்களுக்கு மட்டும், 24 மணி நேர ‘ரோட்சைட் அசிஸ்டென்ட் பிரோகிராம்’ என்ற, கார் பழுது நீக்கும் சேவை அளிக்கப்பட்டு வந்தது. ஆகஸ்ட், 1ம் தேதி முதல், இந்த சேவை அனைத்து, ஸ்கோடா கார்களுக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் எந்த பகுதியில் இருந்து தொடர்பு கொண்டாலும், அருகில் உள்ள இந்நிறுவனத்தின், ஒர்க் ஷாப்பில் இருந்து உதவிக்கு ஆட்கள் வருவார்கள்.
சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது, காரில் திடீரென ஏற்படும் சிறிய பழுது நீக்கம்; பேட்டரி பழுது நீக்கம்; பெட்ரோல் மற்றும் டீசல் டெலிவரி; டயர் மாற்றம்; கார் சாவி தொலைந்து விட்டால், மாற்று சாவிக்கு ஏற்பாடு; காரில் பெரிய அளவில் பழுது ஏற்பட்டு, ‘டோ’ செய்து, காரை எடுத்து செல்லுதல்; அவசர தகவல் பரிமாற்றம்; டாக்சி கார் ஏற்பாடு உள்ளிட்ட சேவைகள், இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில்சேர, கட்டணம் உண்டு. கார் வாங்கி ஐந்து ஆண்டுக்குள் இருந்தால், 3,233 ரூபாய்; ஐந்து ஆண்டுகளுக்கு மேல், 4,233 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் சேர, நாடு முழுவதும் உள்ள ஸ்கோடா கார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலரை அணுகலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|