பதிவு செய்த நாள்
07 ஆக2014
17:24

மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(ஆகஸ்ட் 7ம் தேதி ஏற்ற இறக்கமாக இருந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின் போது சரிவுடன் ஆரம்பித்த பங்குசந்தைகள் பின்னர் சற்று உயர்ந்தன. ஆனால் உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், ஐடி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 76.26 புள்ளிகள் சரிந்து 25,589.01-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 22.80 புள்ளிகள் சரிந்து 7,649.25-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவன பங்குகள் சரிந்தும், 14 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், டிசிஎஸ்., உள்ளிட்ட ஐடி., பங்குகள் சரிந்தும், எண்ணெய்-எரிவாயு மற்றும் பொதுத்துறை நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|