பதிவு செய்த நாள்
08 ஆக2014
04:16
மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக அதிகரிக்கும் என, தரக் குறியீட்டு நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில், 5.6 சதவீத மாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.நாட்டின் தொழில்துறை உற்பத்தி மந்தகதியில் இருந்து மீண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட துவங்கியுள்ளது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக உயரும்.கடந்த நிதியாண்டில், 4.7 சதவீதமாக இருந்த வேளாண் துறை வளர்ச்சி, பருவமழை தாமதத்தால், நடப்பு நிதியாண்டில், 1.3 சதவீதமாக சரிவடையும்.மேலும், நடப்பு நிதியாண்டில், நிதி பற்றாக்குறையை, 4.1 சதவீதமாக குறைக்க, மத்திய அரசு, இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட வாய்ப்பில்லை என, இந்தியா ரேட்டிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|