பதிவு செய்த நாள்
11 ஆக2014
07:23

மும்பை :சென்ற ஜூலை மாதத்தில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட அன்னிய நேரடி முதலீடு, 116 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இது, முந்தைய ஜூன் மாதத்தில், 503 கோடி டாலராகவும், கடந்தாண்டின் ஜூலையில், 247 கோடி டாலராகவும் இருந்தது என, ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளின் கடன் பத்திரங்களில், 29 கோடி டாலரும், நிறுவனங்களின் பங்குகளில், 22 கோடி டாலரும், வங்கி உத்தரவாதத்தின் பேரில், 65 கோடி டாலரும் முதலீடு செய்துள்ளன. மதிப்பீட்டு மாதத்தில், ஆயில் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ருச்சி சோயா, டாடா பவர் உள்ளிட்ட பல நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளன.குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெதர்லாந்தில், 7.56 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.இதையடுத்து, ருச்சி சோயா, சிங்கப்பூரில், 4.95 கோடி டாலரும், ஜீ எண்டர்டெயின்மென்ட், மொரீஷியசில், 4.44 கோடி டாலரும், அர்பிந்தோ பார்மா நெதர்லாந்தில், 4.26 கோடி டாலரும் முதலீடு மேற்கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|