பதிவு செய்த நாள்
11 ஆக2014
07:24

புதுடில்லி: நடப்பாண்டில், பருத்தி உற்பத்தி, 10 சதவீதம் சரிவடையும் என, சர்வதேச பருத்தி ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.நாடு தழுவிய அளவில் காணப்படும் பருவமழை மாறுபாடுகளால், பருத்தி உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, 2014 – 15ம் பருவத்தில், பருத்தி உற்பத்தி 3.50 கோடி பொதிகள் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உற்பத்தி குறைவின் காரணமாக, சர்வதேச நாடுகளுக்கான இந்திய பருத்தி ஏற்றுமதி குறையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.உலக அளவில், தேவை குறைந்து வருவதால், பருத்தி நுாலிழை ஏற்றுமதியும் வீழ்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வர்தமான் குழுமத்தின் தலைவர் ஓஸ்வால் கூறியதாவது:இந்திய பருத்தி நுாலிழையை, சீனா அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது. தற்போது, அந்நாடு இறக்குமதியை வெகுவாகக் குறைத்து கொண்டுள்ளது.இதன் காரணமாக, கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், பருத்தி நுாலிழை ஏற்றுமதி, 20 – 25 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2012 – 13ம் நிதியாண்டில், பருத்தி நுாலிழை ஏற்றுமதி, 111 கோடி கிலோவாக இருந்தது. இது, சென்ற நிதியாண்டில், 141 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.தற்போது, போதுமான அளவிற்கு பருத்தி கையிருப்பு உள்ளது. வரும் அக்டோபர் முதல், பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|