பதிவு செய்த நாள்
11 ஆக2014
07:25

மும்பை :சென்ற ஜூன் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி, 14.13 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 3.3 சதவீதம் அதிகம் என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.குறிப்பாக, தமிழகத்தில், இதன் உற்பத்தி, கணக்கீட்டு மாதத்தில், 11.2 சதவீதம் உயர்ந்து, 2.12 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. அதேசமயம், அசாம் மாநிலத்தில், இதன் உற்பத்தி, 5.62 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 7.04 கோடி கிலோவாக குறைந்துள்ளது என, வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.மழை பற்றாக்குறை மற்றும் வெப்பநிலை உயர்ந்து வருவது போன்றவற்றால், நடப்பாண்டில், அசாமில் தேயிலை உற்பத்தி, 10 சதவீதம் சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில், இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது.நம்நாட்டின், சி.டி.சி., ரக தேயிலை, அதிகளவில், எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.இதே போன்று, உயர்ரக ஆர்த்தேடாக்ஸ் தேயிலை, ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|