பதிவு செய்த நாள்
11 ஆக2014
07:25

உள்நாட்டில் மொபைல் போன் விற்பனை சந்தை பங்களிப்பில், கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சாதனை படைத்து உள்ளது.பங்களிப்புஉள்நாட்டில், மொபைல் போன் விற்பனையில், இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும் லாவா ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்களிப்பு, 40 சதவீதமாக உள்ளது.
மேற்கண்ட மூன்று நிறுவனங்கள், இந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, சீனாவிலிருந்து மொபைல் போன்களை இறக்குமதி செய்து சந்தைப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த, 2013ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட ஒட்டு மொத்த மொபைல் போன்களின் எண்ணிக்கை, 24.50 கோடியாக இருந்தது.இதில், இறக்குமதி செய்யப்பட்ட மொபைல் போன்களின் எண்ணிக்கை, 16.50 கோடியாக உள்ளது.
இது, நடப்பு நிதியாண்டில், 20.90 கோடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஸ்மார்ட் போன்கடந்த நிதியாண்டில், 36 ஆயிரம் கோடி மதிப்பிற்கு மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இது, நடப்பாண்டில், 56 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.இதற்கு, விலை அதிக முள்ள, ‘ஸ்மார்ட் போன்’ வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளதே முக்கிய காரணம் என, இந்திய செல்லுார் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|