பதிவு செய்த நாள்
11 ஆக2014
17:05

மும்பை : கடந்த நான்கு நாட்கள் சரிவுக்கு பின்னர், இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் துவக்க நாளான இன்று(ஆகஸ்ட் 11ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு டிரஸ்ட்டில் புதிய விதிகள் கொண்டு வர செபி ஒப்புதல் அளித்துள்ளதன் எதிரொலியாக பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின, தொடர்ந்து எச்டிஎப்சி., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் லாபம் உயர்ந்ததால் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 190.10 புள்ளிகள் உயர்ந்து 25,519-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 57.40 புள்ளிகள் உயர்ந்து 7,625.95-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 18 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 12 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் மற்றும் வங்கிதுறை பங்குகள் அதிக ஏற்றம் கண்டு இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|