தங்கம் விலை ரூ.40 குறைந்ததுதங்கம் விலை ரூ.40 குறைந்தது ... குறைந்த கட்டண சேவையை கைவிடுகிறது 'ஜெட் ஏர்வேஸ்' குறைந்த கட்டண சேவையை கைவிடுகிறது 'ஜெட் ஏர்வேஸ்' ...
ஜூலை மாத பணவீக்கம் 5.19 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2014
16:04

புதுடில்லி : சில உணவு பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகளின் விலை குறைந்ததை அடுத்து கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் நாட்டின் மொத்த பணவீக்கம் 5.19 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.43 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 5.84 சதவீதமாகவும் இருந்தது.
மொத்தமாக உணவு பொருட்களின் விலை 14 சதவீதம் உயர்ந்திருந்தாலும், காய்கறிகளின் அடிப்படையில் பணவீக்கம் 1.27 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் மொத்த பணவீக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் உருளைக்கிழங்கின் விலை 46.41 சதவீதமும், பழங்களின் விலை 31.71 சதவீதமும் அதிகரித்துள்ளது. பால் விலையும் 10.46 சதவீதம் உயர்ந்துள்ளது.
முட்டை, மாமிசம் மற்றும் மீன் உணவுகளின் அடிப்படையில் ஜூலை மாதத்தில் பணவீக்கம் 2.71 சதவீதம் அதிகரித்துள்ளது. தானியங்களின் விலை 3.31 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 4.46 சதவீதமும், அரிசி விலை 6.85 சதவீதமும், கோதுமை விலை 1.02 சதவீதமும் உயர்வடைந்துள்ளது. உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் 3.67 சதவீதமாகவும், எண்ணெய் வித்துக்கள் போன்ற உணவுப் பொருட்கள் அல்லாத பொருட்களின் பணவீக்கம் 3.32 சதவீதமாக உள்ளது.
அதே சமயம் எரிவாயு பொருட்கள், மின்துறை பொருட்களின் பணவீக்கம் கடந்த மாதத்தை விட 7.40 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஜூலை மாத சில்லரை பணவீக்கம் 7.96 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)