பதிவு செய்த நாள்
16 ஆக2014
00:33
மும்பை:நாட்டின் சேவை துறை ஏற்றுமதி, சென்ற ஜூனில், 6.8 சதவீதம் சரிவடைந்து, 77,820 கோடி ரூபாயாக (1,297 கோடி டாலர்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், சேவைகள் இறக்குமதி, 10.4 சதவீதம் குறைந்து, 43,140 கோடி ரூபாயாக (719 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்–மே காலத்தில், சேவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முறையே, 4,047 கோடி டாலர் மற்றும் 2,409 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.சென்ற 2013–14ம் நிதியாண்டில், சேவைகள் ஏற்றுமதி, 16,701 கோடி டாலராகவும், இவற்றின் இறக்குமதி, 8,819 கோடி டாலராகவும் இருந்தது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவை துறையின் பங்களிப்பு, 60 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|