பதிவு செய்த நாள்
17 ஆக2014
03:57

சென்னை : வேளாண் வளர்ச்சி திட்டங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக, ‘நபார்டு’ வங்கி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, தமிழக மண்டல, ‘நபார்டு’ வங்கி முதன்மை பொது மேலாளர் வெங்கடேஸ்வர ராவ் வெளியிட்டுள்ள அறிக்கை:வேளாண் வளர்ச்சி திட்டங்களுக்காக, திரும்ப செலுத்தக் கூடிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை, ‘நபார்டு’ வங்கி குறைத்துள்ளது.அதன்படி, ஐந்து ஆண்டு கடன்களுக்கான வட்டி விகிதம், 9.30 சதவீதம்; மூன்று – ஐந்துஆண்டு கடன்களுக்கான வட்டி விகிதம், 9.50 சதவீதம்; 18 மாதம் – மூன்று ஆண்டுகள் கடன்களுக்கான வட்டி விகிதம், 9.50 சதவீதமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி, மாநில கூட்டுறவு வங்கிகள், ஊரக வங்கிகள், நெசவாளர் கூட்டுறவு சங்கம், கைத்தறி வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றிற்கும், விளைபொருட்கள் விற்பனைக்காக பெறப்படும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதமும் ஆண்டுக்கு, 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|