பதிவு செய்த நாள்
17 ஆக2014
03:58

சென்னை :கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 96 ரூபாய் குறைந்திருந்தது.சென்னையில், கடந்த, 14ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,707 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,656 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 28,950 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று முன்தினம், சுதந்திர தினத்தை முன்னிட்டு, தங்க ஆபரண சந்தைக்கு விடுமுறை என்பதால், அதே விலைக்கு, தங்கம் விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 14 ரூபாய் குறைந்து, 2,693 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 112 ரூபாய் சரிவடைந்து, 21,544 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 150 ரூபாய் குறைந்து, 28,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 46.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,510 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த திங்களன்று (11ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,705 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 12 ரூபாயும், சவரனுக்கு, 96 ரூபாயும் குறைந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|