பதிவு செய்த நாள்
18 ஆக2014
01:07

புதுடில்லி:ஜூலை மாதத்தில், முதலீட்டாளர்கள், பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில், நிகர அளவில், 1.13 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.அதேசமயம், இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில், பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து, 59,726 கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது. சென்ற மே மற்றும் ஏப்ரல் மாதங்களில், முதலீட்டாளர்கள் பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொண்ட முதலீடு முறையே, 33,661 கோடி மற்றும் 1.12 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன.
சென்ற ஜூலை நிலவரப்படி, பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 35.37 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதேசமயம், 34.24 லட்சம் கோடி ரூபாய் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, இத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு நிகர அளவில், 1.13 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.நடப்பு நிதியாண்டில் இதுவரையில், பரஸ்பர நிதி திட்டங்கள் வாயிலாக, 2 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 53,783 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|