பதிவு செய்த நாள்
18 ஆக2014
01:08

புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், சென்ற ஜூலை மாதத்தில், பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு, 2,444 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.கடந்தாண்டு ஜூலையில், ஒரே ஒரு வெளியீடு மூலம், 736 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது. கணக்கீட்டு மாதத்தில், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனி, பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு, 1,975 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில் திரட்டப்பட்ட அதிகபட்ச அளவாகும்.
இதையடுத்து, முத்துாட் பின்கார்ப் (207 கோடி), முத்துாட் மினி பைனான்சியர்ஸ் (262 கோடி) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், இவ்வகை வெளியீட்டின் மூலம் திரட்டிய தொகை, 3,785 கோடி ரூபாயை எட்டியுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இரண்டு வெளியீடுகள் வாயிலாக வெறும், 870 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டிருந்தது என, ‘செபி’ மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|