பதிவு செய்த நாள்
19 ஆக2014
00:34

புதுடில்லி: சென்ற ஜூன் மாத நிலவரப்படி, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய அல்லது முதலாமாண்டு பிரிமிய வருவாய், 2.5 சதவீதம் அதிகரித்து, 19,699 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது என, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) தெரிவித்துள்ளது.எல்.ஐ.சி.,மேற்கண்ட மொத்த புதிய பிரிமிய வருவாயில், பொதுத் துறை நிறுவனமான, எல்.ஐ.சி.,யின் பங்களிப்பு, 71 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இந்நிறுவனத்தின், முதலாமாண்டு அல்லது புதிய பிரிமிய வருவாய் பங்களிப்பு மட்டும், 14,016 கோடி ரூபாயாக உள்ளது.
தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், மதிப்பீட்டு காலத்தில், 5,683 கோடி ரூபாயாக உள்ளது.குறிப்பாக, எச்.டீ.எப்.சி., ஸ்டாண்டர்ட் நிறுவனத்தின் முதலாமாண்டு பிரிமிய வருவாய் வசூல், 38.6 சதவீதம் உயர்ந்து, 810 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே போன்று, ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய், 38.4 சதவீதம் அதிகரித்து, 782 கோடியாகவும், எஸ்.பீ.ஐ., லைப் நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய், 2.2 சதவீதம் உயர்ந்து, 733 கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.பஜாஜ் அலையன்ஸ்இதையடுத்து, ரிலையன்ஸ் லைப் நிறுவனத்தின் முதலாமாண்டு பிரிமிய வசூல், 7.8 சதவீதம் அதிகரித்து, 554 கோடியாகவும், மேக்ஸ் லைப் நிறுவன பிரிமிய வசூல், 21.6 சதவீதம் உயர்ந்து, 466 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.
அதேசமயம், பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய் வசூல், 10.5 சதவீதம் சரிவடைந்து, 392 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே போன்று, பிர்லா சன்லைப் நிறுவனத்தின் முதலாமாண்டு பிரிமிய வசூல், 47 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 204 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.நாடு தழுவிய அளவில், மொத்தம் 24 நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.கணக்கீட்டு காலத்தில், மேற்கண்ட நிறுவனங்களின் மொத்த பாலிசிகளின் எண்ணிக்கை, 61,78,231லிருந்து, 38,19,547 ஆக சரிவடைந்துஉள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|