பதிவு செய்த நாள்
19 ஆக2014
00:36

புதுடில்லி,: அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளில், பங்கேற்பு ஆவணங்கள் மூலம் மேற்கொண்ட முதலீடு, சென்ற ஜூலை மாதத்தில், 2.08 லட்சம் கோடி ரூபாயாக (3,400 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.இது, ஜூன் மாதத்தில், 2.24 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், சென்ற ஜூலை மாதத்தில் தான், முதன் முறையாக பங்கேற்பு ஆவணங்கள் மூலமான முதலீடு சரிவை கண்டுள்ளது.வெளிநாடுகளில் வசிக்கும், அதிக நிகர சொத்துமதிப்பு கொண்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனர்கள், அன்னிய நிதி நிறுவனங்கள் வெளியிடும் பங்கேற்பு ஆவணங்கள் மூலம், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதனால், அவர்களுக்கு செலவு, நேரம் ஆகியவை மிச்சமாகின்றன.கடந்த ஜூலையில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகள் மற்றும் கடன்பத்திர சந்தைகளில், நிகர அளவில், முறையே, 13 ஆயிரம் கோடி மற்றும் 23 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|