பதிவு செய்த நாள்
19 ஆக2014
00:37

புதுடில்லி :ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, நடப்பு நிதியாண்டில், 10 சதவீதம் அதிகரிக்கும் என, ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலா துறை மேலாளர் நிஷாந்த் கஷிகர் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறும்போது:2013ம் ஆண்டு ஜூலை முதல் சென்ற ஜூன் (2014) வரையிலான ஓராண்டு காலத்தில், ஆஸ்திரேலியாவிற்கு, 1.85 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதில், விடுமுறை கொண்டாட்டங்கள், வர்த்தகம், படிப்பு ஆகியவற்றிற்காக வருகை தந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.அடுத்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில், ஐ.சி.சி., கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதையொட்டி, நடப்பு நிதியாண்டில், இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 8 – 10 சதவீதம் அதிகரித்து, 2 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|