பதிவு செய்த நாள்
19 ஆக2014
00:38

சேலம் :ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த நிலக்கடலை வரத்து சரிவால், நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு, 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் நிலக்கடலையின் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.ஆந்திரா ,தமிழக எண்ணெய் ஆலைகளுக்கு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வாரத்துக்கு, 70 லாரிகளில் நிலக்கடலை விற்பனைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த மாநிலங்களில் தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருவதையடுத்து, விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், அறுவடையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாநில நிலக்கடலை வரத்து, 20 லாரிகளாக குறைந்து விட்டது. ஈரோடு மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில், சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் எண்ணெய் ஆலைகளுக்கு, நிலக்கடலை கிடைக்காததால், கடலை எண்ணெய் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.தட்டுப்பாடுமார்க்கெட்டில் நிலக்கடலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலை கிலோவுக்கு, 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.கடந்த வாரம் நிலக்கடலை பருப்பு (பச்சை) குவிண்டால், 7,800 ரூபாய்க்கு விற்றது, 9,700 ரூபாயாகவும், வறுத்த பருப்பு குவிண்டால், 8,800 ரூபாய்க்கு விற்றது, 9,800 ரூபாயாக உயர்ந்துள்ளது.மொத்த விலையில் உயர்வு ஏற்பட்டதை அடுத்து, சில்லரை விற்பனை விலையில், நிலக்கடலை கிலோ, 80 ரூபாய்க்கு விற்றது, 100 ரூபாயாகவும், வறுத்த பருப்பு கிலோ, 85 ரூபாய்க்கு விற்றது, 110 ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|