பதிவு செய்த நாள்
19 ஆக2014
12:30

புதுடில்லி:சகாரா நிதி நிறுவனத்துக்கு சொந்தமாக, வெளிநாடுகளில் உள்ள மூன்று ஓட்டல்களை, புருனே சுல்தான், 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சகாரா நிதி நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய், முதலீட்டாளர்களிடம், 20 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சுப்ரதா ராய், ஐந்து மாதங்களாக, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 'ஜாமின் வேண்டுமானால், 10 ஆயிரம் கோடி ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டும்' என, அவருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, வெளிநாடுகளில் உள்ள தனக்கு சொந்தமான ஓட்டல்களை விற்று, பிணைத் தொகையை செலுத்துவதாக, சுப்ரதா ராய் கூறினார். இந்நிலையில், உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான புருனே சுல்தான், இந்த மூன்று ஓட்டல்களையும், 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விலை பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|