பதிவு செய்த நாள்
21 ஆக2014
00:13

மும்பை:நாட்டின் பங்கு வர்த்கம், நேற்று திடீர் சுணக்கம் கண்டது. சாதகமற்ற ஐரோப்பிய சந்தை நிலவரங்கள் மற்றும் லாப நோக்கம் கருதி, சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது போன்வற்றால், ‘சென்செக்ஸ்’ 0.40 சதவீதம் சரிவடைந்தது.நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 1.32 சதவீதம் சரிவடைந்தது.
இதையடுத்து, நுகர் பொருட்கள் (–0.70 சதவீதம்) மோட்டார் வாகனம் (–0.56 சதவீதம்) மற்றும் பொறியியல் (–0.51 சதவீதம்) ஆகிய துறைகள் உள்ளன.எனினும், மருந்து, மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, முதலீட்டாளர்களிடையே வரவேற்பு காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 106.38 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 26,314.29 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., டாட்டா மோட்டார்ஸ், ஐ.டி.சி., உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன்பார்மா, சிப்லா,பெல் உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 22.20 புள்ளிகள் குறைந்து, 7,875.30 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|