பதிவு செய்த நாள்
21 ஆக2014
00:18

சென்னை:பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனம், ‘ஜீவன் ரக் ஷக்’ என்ற புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம், 75 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு செய்து கொள்ளலாம்.பாலிசியின் முதிர்வு காலத்தில், அடிப்படை காப்பீட்டு தொகையுடன், விசுவாசத்துக்கான கூடுதல் தொகை எதுவும் இருந்தால் அதுவும் சேர்த்து வழங்கப்படும்.
காப்பீட்டுதாரர் மரண மடைய நேர்ந்தால், அடிப்படை உறுதி அளிக்கப்படும் தொகை அல்லது ஆண்டு பிரீமியம் போல், 10 மடங்கு அல்லது மரணம் அடைந்த தேதியில் செலுத்தப்பட்டுள்ள அனைத்து பிரீமியங்களின் மதிப்பில், 105 சதவீதம் இதில் எது அதிகமோ அது வழங்கப்படும்.
இப்புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தில், 8 – 55 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். இப்பாலிசிக் கான கால வரம்பு குறைந்த பட்சம், 10 ஆண்டுகள் முதல், அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பின், கடன் பெறும் வசதியும் உள்ளது என, இந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|