பதிவு செய்த நாள்
21 ஆக2014
00:30

புதுடில்லி:நாட்டின் மறைமுக வரி வசூல், நடப்பு 2014–15ம் நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில் (ஏப்.,–ஜூலை), 3.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.54 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 1.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தயாரிப்பு துறை:மதிப்பீட்டு காலத்தில், சுங்கம் மற்றும் உற்பத்தி வரி வசூல் சரிவடைந் துள்ளது. இது, தயாரிப்பு துறையில் நிலவும் மந்த நிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. குறிப்பாக, உற்பத்தி வரி வசூல், 0.4 சதவீதம் பின்னடைவை கண்டு, 48,195 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இதே போன்று, சுங்க வரி வசூலும், 2.2 சதவீதம் சரிவடைந்து, 55,305 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், சுங்க வரி வசூல், 56,526 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. புதிய பிரிவுகளில், வருவாய் அதிகாரிகள் கவனம் செலுத்தியதை அடுத்து, கணக்கீட்டு காலத்தில், சேவை வரி வசூல் 16.4 சதவீதம் அதிகரித்து, 50,850 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
பட்டியல்:சேவை வரி வசூலை அதிகரிக்கும் நோக்கில்,மத்திய அரசு, எதிர்மறை வரிவிதிப்பு பட்டியல் திட்டத்தை அறிமுகப்படுத் தியது.இதன்படி, இப்பட்டியலில் அடங்கியுள்ளவை தவிர்த்து,இதர அனைத்து சேவைகளும் வரி விதிப்புக்குட்பட்டவை ஆகும். நடப்பு நிதியாண்டில், மறைமுக வரிகள் வாயிலாக, 6.24 லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு, இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்ற ஜூலை மாதத்தில் மட்டும், நாட்டின் மறைமுக வரி வசூல், 4.9 சதவீதம் அதிகரித்து, 41,890 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதில், உற்பத்தி வரி, 7.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14,127 கோடி ரூபாயாகவும், சுங்க வரி வசூல், 0.2 சதவீதம் மட்டும் உயர்ந்து, 15,756 கோடி ரூபாயாகவும் அதிகரித்து உள்ளன.மதிப்பீட்டு மாதத்தில், சேவை வரி வசூலும், 8.4 சதவீதம் உயர்ந்து, 12,007 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு ஜூலையில், 11,076 கோடி ரூபாயாக இருந்தது என, நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|