பதிவு செய்த நாள்
21 ஆக2014
10:54

சாலையில் வாகனத்தை இயக்கும் எவரும், டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் என்பது சட்டம். இதற்காக, 79 ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 1.50 கோடி பேர், டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.
* டிரைவிங் லைசென்ஸ் பெற, விண்ணப்பம் செய்பவர்களுக்கு முதல் கட்டமாக, எல்.எல்.ஆர்., என அழைக்கப்படும், பழகுனர் உரிமம் வழங்கப்படும். இதற்கு, இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு, வயது சான்றாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் மூன்று புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம், 30 ரூபாயும், சேவை கட்டணம், 30 ரூபாயும் வசூலிக்கின்றனர்.
* எல்.எல்.ஆர்., பெற்று, ஒரு மாதத்துக்கு பின்னரே, டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும். ஆறு மாத காலத்திற்குள், வாகனங்களை விதிமுறைக்கு உட்பட்டு இயக்கி காட்டி, டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.
* டிரைவிங் லைசென்ஸ் பெற, சேவை கட்டணம் உட்பட, 350 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் கால அளவானது, வயதை பொறுத்தது. ஒருவர், 20 வயதில் டிரைவிங் லைசென்ஸ் பெறும் போது, 40 வயது வரை அவருக்கு கால அளவு வழங்கப்படும். 39 வயதில், ஒருவர் டிரைவிங் லைசென்ஸ் பெற்றாலும், 40 வது வயதில் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். பின்னர், 50 வயது வரை, டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும். அதன் பின்னர், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பஸ், ஆட்டோ மற்றும் கனரக வாகனங்களை இயக்குபவராக இருப்பின், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
* டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போகும் பட்சத்தில், மாற்று உரிமம் (டூப்ளிகேட்) வழங்கப்படும். அதே வேளையில், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காமல் வைத்திருந்தால், ஆண்டுக்கு, 50 ரூபாய் என அபராத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
* டிரைவிங் லைசென்ஸ் பெறாமல், வாகனங்களை இயக்குபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், மோட்டார் வாகன சட்டம், 180ன் படி, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவரிடம், வாகனத்தை இயக்க கொடுக்கும் வாகன உரிமையாளருக்கு, மோட்டார் வாகன சட்டம், 180ன்படி, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
* தவறான முகவரி கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் பெறப்பட்டது தெரியவந்தால், அதை ரத்து செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அதிகாரமுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|