பதிவு செய்த நாள்
21 ஆக2014
10:57

தென் கொரிய நாட்டை சேர்ந்த ஹுண்டாய் மோட்டார் கம்பெனியின் துணை நிறுவனம், ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட். இந்த நிறுவனத்திற்கு, சென்னையில் தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில், ‘இயான், சான்ட்ரோ, ஐ10, ஐ20, எக்ஸ்சென்ட், வெர்னா, எலன்ட்ரா, சொனாட்டா மற்றும் சான்டா பீ’ ஆகிய மாடல் கார்களை, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இதில், ஐ20 மாடல் கார், இந்தியாவில், 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார், பிரன்ட் வீல் டிரைவ் வசதி கொண்டது. தற்போது, ஐ20 மாடல் காரின், 2வது தலைமுறை மாடலை, ஹுண்டாய் நிறுவனம், இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காருக்கு, ‘ஐ20 எலைட்’ என பெயரிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும், புதிய கார் கிடைக்கும்.
பெட்ரோல் காரில், 1.2 டியூல் விடிவிடி கப்பா இன்ஜினும், டீசல் காரில், யு2 1.4 லிட்டர் சிஆர்டிஐ இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில், ‘என்.வி.எச்., லெவல்’ எனப்படும், சத்தம், அதிர்வு மற்றும் அதிவிரைவு பிரச்னையின் தாக்கம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் சிறப்பு அம்சங்கள்
* பெரிய காரின் தோற்றத்தை அளிக்கும் வகையில், பெரிய அளவிலான பேனட்.
* 16 அங்குல அலாய் வீல்கள்
* பல்நோக்கு திறன் கொண்ட ஸ்டியரிங் வீல்.
* யு.எஸ்.பி., 1 ஜி.பி., மெமரி வசதியுடன், எம்.பி., 3 ஆடியோ சிஸ்டம்
* காரின் பின் பகுதியில், ‘ஏசி’ வசதி
* உயரத்தை தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் வசதி கொண்ட டிரைவர் சீட்.
* ஸ்டார்ட் – ஸ்டாப் பட்டன்.
* ஸ்மார்ட் கீ
* இரண்டு ‘ஏர் பேக்’ பாதுகாப்பு
* ஆன்டி – லாக் பிரேக்கிங் சிஸ்டம்
* மேம்படுத்தப்பட்ட, காரின் பின்பகுதியில் பொருத்தப்பட்ட பார்க்கிங் கேமரா.
ஹுண்டாய் ஐ20 எலைட் கார், ‘எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா’ என, நான்கு வகைகளில் கிடைக்கும்.
இந்த காரின் விலை – எக்ஸ்ஷோரூம், சென்னை; அறிமுக சலுகையுடன் (ரூபாயில்)
மாடல் – எரா – மேக்னா – ஸ்போர்ட்ஸ் – அஸ்டா
பெட்ரோல் : 4,98,609 - 5,51,534 - 6,04,458 - 6,58,401
டீசல் : 6,20,742 - 6,73,667 - 7,26,592 - 7,80,534
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|