அன்னிய நிறுவனங்கள்ரூ.13 ஆயிரம் கோடி முதலீடுஅன்னிய நிறுவனங்கள்ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவு ...
நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி 31 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2014
00:56

புதுடில்லி :நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., - ஜூன்), இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 31.18 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,686 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 7,383 கோடி ரூபாயாக இருந்தது.புள்ளிவிவரம்மதிப்பீட்டு காலாண்டில், டாலர் மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 22.70 சதவீதம் உயர்ந்து, 132 கோடி டாலரிலிருந்து, 162 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது என, வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கீட்டு காலாண்டில், தோல் காலணிகள் ஏற்றுமதி, 38.82 சதவீதம் அதிகரித்து, 2,348 கோடி ரூபாயிலிருந்து, 3,260 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே போன்று, பயன்பாட்டிற்கு தயாரான தோல் பொருட்கள் ஏற்றுமதியும், 24.49 சதவீதம் உயர்ந்து, 1,821 கோடியிலிருந்து, 2,268 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.காலணிகளுக்கான உதிரி தோல் பாகங்கள் ஏற்றுமதி, மதிப்பீட்டு காலாண்டில், 26.19 சதவீதம் வளர்ச்சி கண்டு, 445 கோடியிலிருந்து, 562 கோடி ரூபாயாக உயர்ந்துஉள்ளது.உலகளவில், இந்திய தோல் ஆடைகளுக்கு தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இவற்றின் ஏற்றுமதி, 18.82 சதவீதம் உயர்ந்து, 650 கோடியிலிருந்து, 772 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.குதிரை சேணம்மேலும், தோல் பொருட்கள் ஏற்றுமதியும், மதிப்பீட்டு காலாண்டில், 21.40 சதவீதம் அதிகரித்து, 1,692 கோடி ரூபாயிலிருந்து, 2,055 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இவை தவிர, குதிரைகளுக்கான சேணம் உள்ளிட்ட விலங்கினங்களுக்கான தோல் பொருட்கள் ஏற்றுமதி, 26.31 சதவீதம் அதிகரித்து, 177 கோடியிலிருந்து, 224 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.தோல் சாரா இதர வகை காலணிகளுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி ஏற்பட்டதையடுத்து, கணக்கீட்டு காலாண்டில், இவற்றின் ஏற்றுமதி, 119.53 சதவீதம் உயர்ந்து, 248 கோடியிலிருந்து, 545 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதியில், 33.65 சதவீத பங்களிப்புடன் தோல் காலணிகள் பிரிவு முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, பயன்பாட்டிற்கு தயாரான தோல் பொருட்கள் (23.41 சதவீதம்), தோல் பொருட்கள் (21.21), தோல் ஆடைகள் (7.98), காலணி உதிரி பாகங்கள் (5.81), தோல் சாரா காலணிகள் (5.63), விலங்கினங்களுக்கான தோல் பொருட்கள் (2.31 சதவீதம்) ஆகியவை உள்ளன.ஜெர்மனி கணக்கீட்டு காலாண்டில், ஒட்டுமொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதியில், ஜெர்மனி, 12.19 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டிற்கான இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, டாலர் மதிப்பின் அடிப்படையில், 25.21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 16 கோடி டாலரிலிருந்து, 20 கோடி டாலராக அதிகரித்து உள்ளது.இதையடுத்து, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஹாங்காங்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)