பதிவு செய்த நாள்
29 ஆக2014
00:57

மும்பை:நடப்பு ஆகஸ்ட் மாதத்திற்கான பங்கு, முன்பேர ஒப்பந்த கணக்கு முடிப்பு இறுதி நாளான நேற்று, நாட்டின் பங்கு வர்த்தகம், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசு வெளியிட உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கும் என்ற நிலைப்பாட்டால், முதலீட்டாளர்கள் ஓரளவிற்கு ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர்.இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.29 சதவீதம் மற்றும் 0.23 சதவீதம் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 77.96 புள்ளிகள் அதிகரித்து, 26,638.11 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பெல், கெயில், விப்ரோ உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாடா பவர், என்.டி.பி.சி., பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 18.30 புள்ளிகள் உயர்ந்து, 7,954.35 புள்ளிகளில் நிலைபெற்றது.இன்று விடுமுறை: விநாயகர் சதுர்தியை முன்னிட்டு, இன்று, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|