பதிவு செய்த நாள்
30 ஆக2014
02:38

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,–ஜூன்), தொலைத்தொடர்பு சேவைகள் துறையின் வருவாய், 11.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 40,834 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 36,730 கோடி ரூபாயாக இருந்தது என, ஐ.ஐ.எப்.எல்., நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட மொத்த வருவாயில், இணையதளம் சேவையிலான வருவாய், 12 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே, இத்துறை நிறுவனங்களின் வருவாய், இரட்டை இலக்க அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.மொத்த வருவாய் சந்தை பங்களிப்பில், டெலிநார் மற்றும் ஏர்செல் நிறுவனங்களின் முறையே, 44 சதவீதம் மற்றும் 22 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக உள்ளது. இதே போன்று, டாடா நிறுவனத்தின் பங்களிப்பும், 16.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது.அதே சமயம், பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., மற்றும் ஆர்காம் நிறுவனங்களின் வருவாய் சந்தை பங்களிப்பு, தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது என, ஐ.ஐ.எப்.எல்., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|