பதிவு செய்த நாள்
30 ஆக2014
02:42

ஊட்டி:நீலகிரி தேயிலை துாள் ஏல விலை, ‘தடாலடி’யாக சரிந்ததால், மூலப்பொருளான பசுந்தேயிலை விலையும் குறைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் ‘ஆட்டம்’ கண்டுள்ளது. நீலகிரி தேயிலைக்கு உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகம் திருப்தியாக இல்லாததால், ஏலத்தில், தேயிலை துாளின் விலையில், சரிவு தொடர்கிறது.
கடந்த வாரம் ஒரு கிலோ தேயிலை துாளின் சராசரி விலை கிலோவுக்கு, 63 ரூபாயாகமட்டுமே இருந்தது. கடந்தாண்டு, இதே கால கட்டத்தில், சராசரி ஏல விலை 85 ரூபாயாக இருந்தது.ஏல விலையின் அடிப்படையில், பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகள், தேயிலை விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு, 8 –- 10 ரூபாய் வரை மட்டுமே வழங்குகின்றன. இதனால், விவசாயிகள், பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
நீலகிரி சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறுகையில், ‘‘ஏலத்தில்விற்கப்படும் தேயிலை துாள் வெளி மார்க்கெட்டிற்கு வந்து சேர்வதற்குள், இடையில் வர்த்தக முறைகேடுகள் நடக்கின்றன, என்பது நீண்ட கால குற்றச்சாட்டு.தேயிலை துாளின் ஏல விலையை காட்டிலும், 2 முதல் 10 மடங்கு வரை கூட கூடுதல் விலைக்கு தேயிலை துாளை விற்கின்றனர்.
தேயிலை விவசாயிகள், தொழிற்சாலை உற்பத்தியாளர்கள், தேயிலை ஏலதாரர்கள், விற்பவர்கள் என, தேயிலை தொழில் சார்ந்த அனைத்து தரப்பினரையும் கண்காணித்து, வர்த்தகத்தை முறைப்படுத்துவது தேயிலை வாரியத்தின் கடமையாகும், என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|