பதிவு செய்த நாள்
31 ஆக2014
00:43

புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில் இதுவரையிலுமாக, பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு, 4 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.சென்ற 2013 – 14ம் முழு நிதியாண்டில், இவ்வகை கடன்பத்திரங்களை வெளியிட்டு, நிறுவனங்கள் திரட்டிய தொகை, 42,383 கோடி ரூபாயாக இருந்தது. மொத்தம், 35 வெளியீடுகள் மூலம் மேற்கண்ட தொகை திரட்டப்பட்டது.
பல நிறுவனங்கள், தங்களது நடைமுறை மூலதன தேவைக்காகவும், இதர நடவடிக்கைகளுக்காகவும், பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டி கொள்கின்றன.பங்குகளாக மாறக்கூடிய கடன்பத்திரங்களை காட்டிலும், பங்குகளாக மாறாத கடன்பத்திரங்கள், அதிக வட்டி வருவாய் வழங்குகின்றன. எனவே, இவ்வகை வெளியீடுகளுக்கு, முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது.
ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ், எஸ்.ஆர்.இ.ஐ., இன்ப்ராஸ்ட்ரக்சர், முத்துாட் பைனான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள், 4,000 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. மேற்கண்ட தொகை, 10 வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்டுள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|