வெங்காயம் இறக்குமதிகட்டுப்பாடுகள் தளர்வுவெங்காயம் இறக்குமதிகட்டுப்பாடுகள் தளர்வு ... முக்கிய எட்டு துறைகள் உற்பத்திவளர்ச்சி 2.7 சதவீதமாக குறைந்தது முக்கிய எட்டு துறைகள் உற்பத்திவளர்ச்சி 2.7 சதவீதமாக குறைந்தது ...
முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை விறுவிறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2014
00:35

புதுடில்லி :சென்ற ஆகஸ்ட் மாதத்தில், முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை விறுவிறுப்படைந்து உள்ளது.பண்டிகை காலங்கள், அடுத்தடுத்து வரவிருப்பதையடுத்து, மோட்டார் வாகன விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில், பெட்ரோல் கார்களுக்கான தேவையும் சிறப்பான அளவில் அதிகரித்து வருவதாக, இத்துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.மாருதி சுசூகி: கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவனம், சென்ற ஆகஸ்ட்டில், 1,10,776 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையுடன் (87,323 கார்கள்) ஒப்பி
டுகையில், 26.9 சதவீதம் அதிகமாகும்.குறிப்பாக, இந்நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை, 29.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 76,018லிருந்து, 98,304ஆக அதிகரித்துள்ளது.இதே போன்று, இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதியும், 10.3 சதவீதம் அதிகரித்து, 11,305 என்ற எண்ணிக்கையிலிருந்து, 12,472ஆக வளர்ச்சி கண்டுள்ளது.போர்டு இந்தியா: சென்ற ஆகஸ்ட் மாதத்தில், போர்டு இந்தியாவின் கார் விற்பனை, 27.35 சதவீதம் அதிகரித்து, 11,065லிருந்து, 14,092ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 15 சதவீதம் சரிவடைந்து, 8,008லிருந்து, 6,801 ஆக வீழ்ச்சி கண்டு உள்ளது.
ஹோண்டா கார்ஸ்: கணக்கீட்டு மாதத்தில், ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, 88 சதவீதம் அதிகரித்து, 8,913 என்ற எண்ணிக்கையிலிருந்து, 16,758 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.டி.வி.எஸ்., மோட்டார்: ஆகஸ்ட் மாதத்தில், டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியின் ஒட்டு மொத்த வாகன விற்பனை, 46 சதவீதம் அதிகரித்து, 1,55,532லிருந்து, 2,27,482ஆக உயர்ந்துள்ளது.ஹீரோ மோட்டோகார்ப்: இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை, நடப்பாண்டு ஆகஸ்ட்டில், 21.43 சதவீதம் உயர்ந்து, 4,59,996 என்ற எண்ணிக்கையிலிருந்து, 5,58,609ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
எச்.எம்.எஸ்.ஐ., நிறுவனம்: இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா (எச்.எம்.எஸ்.ஐ.,) நிறுவனம், சென்ற ஆகஸ்ட்டில், 3,88,210 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையுடன் (3,08,881 வாகனங்கள்) ஒப்பிடுகையில், 25.68 சதவீதம் அதிகமாகும்.ஹூண்டாய் நிறுவனம்: சென்ற ஆகஸ்ட் மாதத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, 8 சதவீதம் குறைந்து, 52,319லிருந்து, 48,111ஆக சரிவடைந்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ்: மதிப்பீட்டு மாதத்தில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை, 17.59 சதவீதம் சரிவடைந்து, 49,611லிருந்து, 40,883 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.மகிந்திரா: மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனையும், 7.18 சதவீதம் சரிவடைந்து, 37,897 என்ற எண்ணிக்கையிலிருந்து, 35,175ஆக குறைந்துள்ளது.டொயோட்டா: மேலும், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின், வாகன விற்பனையும், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 18.62 சதவீதம் சரிவடைந்து, 15,219 என்ற எண்ணிக்கையிலிருந்து, 12,384ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)