பதிவு செய்த நாள்
14 செப்2014
06:31
சென்னை: கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 304 ரூபாய் சரிவடைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,553 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,424 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 27,300 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஒரு ரூபாய் குறைந்து, 2,552 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, எட்டு ரூபாய் சரிவடைந்து, 20,416 ரூபாய்க்கும் விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 10 ரூபாய் குறைந்து, 27,290 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 43.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 40,745 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த திங்களன்று (8ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,590 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,720 ரூபாய்க்கும் விற்பனையானது.இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 38 ரூபாயும், சவரனுக்கு, 304 ரூபாயும் சரிவடைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|