பதிவு செய்த நாள்
18 செப்2014
00:09

புதுடில்லி :மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைளால், சென்ற ஜூலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 21 ஆயிரம் கோடி ரூபாயாக (350 கோடி டாலர்) வளர்ச்சி கண்டு உள்ளது.
துறைமுகம்இது, கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில், 9,900 கோடி ரூபாயாக (165 கோடி டாலர்) இருந்தது என, தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.நாட்டின் விரைவான மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு, துறைமுகம், விமான நிலையம், சாலை போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு துறையை பலப்படுத்துவது மிகவும் அத்தியாவசிய மானதாகும். இதற்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1 லட்சம் கோடி டாலர் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனை, அன்னிய முதலீட்டின் வாயிலாக ஈர்க்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக, காப்பீடு மற்றும் பாதுகாப்பு தளவாட தயாரிப்பு துறையில், அன்னிய முதலீட்டு உச்சவரம்பு, 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தவிர, கட்டுமான துறையிலும் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில், விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்பு: இது போன்றவற்றால், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில், அன்னிய நேரடி முதலீடு, 52 சதவீதம் வளர்ச்சி கண்டு, 64,380 கோடி ரூபாயாக(1,073 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 42,300 கோடி ரூபாயாக (705 கோடி டாலர்) இருந்தது.அன்னிய நேரடி முதலீட்டை அதிகளவு ஈர்த்ததில், தொலைத்தொடர்பு துறை, 233 கோடி டாலர் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, சேவைகள் (100 கோடி டாலர்), மருந்து (89 கோடி டாலர்) மற்றும் கட்டுமானம் (43 கோடி டாலர்) உள்ளிட்ட துறைகள் உள்ளன.மொரீஷியஸ்மதிப்பீட்டு நான்கு மாத காலத்தில், மொரீஷியஸ் நாட்டிலிருந்து, அதிகபட்ச அளவாக, 338 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர் (166 கோடி டாலர்), நெதர்லாந்து (149 கோடி டாலர்), ஜப்பான் (83.40 கோடி டாலர்), இங்கிலாந்து (82.40 கோடி டாலர்) மற்றும் அமெரிக்கா (35 கோடி டாலர்) ஆகிய நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு,முதலீட்டை மேற்கொண்டுள்ளன.
சென்ற 2013–14ம் நிதியாண்டில்,இந்தியா ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு, 2,429 கோடி டாலராகும். இது, முந்தைய 2012–13ம் நிதியாண்டில், 2,242 கோடி டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|