பதிவு செய்த நாள்
18 செப்2014
11:21

எரிபொருள் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, மகிந்திரா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரெவா இ2ஒ எலக்ட்ரிக் கார், புதுப்பொலிவுடன், இ2ஒ பிரீமியம் என்ற காராக விற்பனைக்கு வந்துள்ளது.
அதிகபட்ச வேகம், 120 கி.மீ., ஓட்டுவதற்கு சவுகரியமாக எலக்ட்ரிக் பவர் ஸ்டியரிங், என, பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள, இ2ஒ பிரீமியம் காரில், பின்பக்க கேமரா, பார்க்கிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல வசதிகளும் புகுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஸ்மார்ட் போன் கொண்டு வாகனத்தின் பேட்டரி அளவு, அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையத்தை தெரிந்து கொள்ளும் வசதி உள்ளிட்ட பல வசதி களும் இதில் அடங்கியுள்ளன.
தற்போது டில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் புனே உள்ளிட்ட இடங்களில், 300 சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ள இந்நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும், 100 நிலையங்களை நிறுவ ஏற்பாடு செய்து வருகிறது.
காரின் விலை 5.72 லட்சம் ரூபாய் (ஆன்-ரோடு, டில்லி)
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|