பதிவு செய்த நாள்
18 செப்2014
11:22

அமெரிக்காவை சேர்ந்த, போர்டு கார் நிறுவனம், இந்தியாவில், 2012ல், மினி எஸ்.யு.வி., பிரிவில் வரும், ‘ஈகோ ஸ்போர்ட்’ என்ற காரை அறிமுகப்படுத்தியது. சென்னையில், உள்ள போர்டு கார் தொழிற்சாலையில், இந்த கார் அசெம்பள் செய்யப்படுகிறது.
இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. பெட்ரோல் காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் வசதி, 6 ஸ்பீடு ஆட்டோடிரான்மிஷன் கியர் வசதி என, இரண்டு வகைகள் உள்ளன. டீசல் கார், 5 ஸ்பீடு மேனுவல் கியர் வசதியில் மட்டும் கிடைக்கிறது.
இந்த கார், பிரன்ட் வீல் டிரைவ், பவர் ஸ்டியரிங் வசதி கொண்டது. இந்தியாவில், 60 ஆயிரம், ஈகோஸ்போர்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஏற்றுமதியையும் சேர்த்து, 1 லட்சம் கார்கள் விற்பனை, என்ற சாதனையை, ஈகோஸ்போர்ட் கார், நிகழ்த்தி உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|