பதிவு செய்த நாள்
18 செப்2014
16:19

மும்பை : இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கிய போதும் மதியத்திற்கு பிறகு ஏற்றம் கண்டதால் பங்குசந்தைகள் எழுச்சி கண்டன, இதனால் சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. ஆனால் அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களை மாற்றமின்றி செய்ய முடிவெடுத்திருப்பதன் எதிரொலியாகவும், சீனா இந்திய இடையே ஏற்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அந்நிய முதலீடுகள் அதிகரிப்பின் காரணமாகவும் இந்திய பங்குசந்தைகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 481 புள்ளிகள் உயர்ந்து 27,112.21-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 139 புள்ளிகள் உயர்ந்து 8,114.75-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ஹீரோ மோட்டா கார்ப் பங்குகள் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. இதற்கு அடுத்தப்படியாக எல்அண்ட்டி., எச்டிஎப்சி., டாக்டர் ரெட்டி, பெல் போன்ற நிறுவன பங்குகளும் ஏற்றம் கண்டன. அதேசமயம் இன்போசிஸ், எச்யுஎல்., ஸ்டெர்லைட் போன்ற நிறுவன பங்குகள் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|