விளைச்சல் அமோகம்:அவரை விலை வீழ்ச்சிவிளைச்சல் அமோகம்:அவரை விலை வீழ்ச்சி ... தொடர்ந்து குறைகிறது தங்கம் விலை தொடர்ந்து குறைகிறது தங்கம் விலை ...
மொபைல்போன் வாடிக்­கை­யா­ளர்கள் 75 கோடியாக அதி­க­ரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2014
00:19

புது­டில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், ஜி.எஸ்.எம்., மொபைல்போன் வாடிக்­கை­யா­ளர்கள் எண்­ணிக்கை, 55.40 லட்சம் அதி­க­ரித்து, 74.99 கோடி­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.
இது, கடந்த ஜூலை நில­வ­ரப்­படி, 74.44 கோடி­யாக இருந்­தது என, இந்­திய செல்­லுலார் ஆப­ரேட்­டர்கள் கூட்­ட­மைப்பு (சி.ஓ.ஏ.ஐ.,) தெரி­வித்­துள்­ளது.ஐடியா செல்லுலார்மேற்­கண்ட மொத்த எண்­ணிக்­கையில், ரிலையன்ஸ் கம்­யூ­னி­கேஷன்ஸ் மற்றும் டாட்டா டெலி­சர்­வீசஸ் நிறு­வ­னங்­களின் சந்­தா­தா­ரர்கள் சேர்க்­கப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
தற்­போது, இக்­கூட்­ட­மைப்பில், ரிலையன்ஸ் ஜியோ இன்­போகாம் நிறு­வனம் புதி­தாக இணைந்­துள்­ளது. கணக்­கீட்டு மாதத்தில், ஐடியா செல்­லுலார் நிறு­வ­னத்தில், அதி­க­பட்­ச­மாக, 17.20 லட்சம் வாடிக்­கை­யா­ளர்கள் புதி­தாக இணைந்­துள்­ளனர். இதை­ய­டுத்து, இந்­நி­று­வ­னத்தின் ஒட்டு மொத்த வாடிக்­கை­யா­ளர்கள் எண்­ணிக்கை, 14.18 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது. மேலும், இந்­நி­று­வ­னத்தின் சந்தை பங்­க­ளிப்பு, 18.91 சத­வீதம் என்ற அளவில் உள்­ளது.
இதை­ய­டுத்து, வோடபோன் நிறு­வனம், 12.20 லட்சம் வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்து கொண்­ட­தை­ய­டுத்து, மொத்த சந்­தா­தாரர் எண்­ணிக்கை, 17.24 கோடி­யாக உயர்ந்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்தின் சந்தை பங்­க­ளிப்பு, 23 சத­வீ­த­மாகும்.மதிப்­பீட்டு மாதத்தில், பார்தி ஏர்டெல் நிறு­வனம், 7.69 லட்சம் புதிய வாடிக்­கை­யா­ளர்­களை இணைத்து கொண்­ட­தை­ய­டுத்து, ஒட்டு மொத்த சந்­தா­தாரர் எண்­ணிக்கை, 21.05 கோடி­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இந்­நி­று­வனம், 28.07 சத­வீத சந்தை பங்­க­ளிப்­புடன் தொடர்ந்து முத­லி­டத்தில் உள்­ளது.ஏர்செல்:இவை­த­விர, ஏர்செல் நிறு­வனம், 9.05 லட்சம் வாடிக்­கை­யா­ளர்­க­ளையும், யூனிநார் நிறு­வனம், 7.06 லட்சம் வாடிக்­கை­யா­ளர்­க­ளையும் புதி­தாக சேர்த்து கொண்­டுள்­ளன.
இதை­ய­டுத்து, மேற்­கண்ட இரு நிறு­வ­னங்­களின் மொத்த சந்­தா­தாரர் எண்­ணிக்கை முறையே, 7.48 கோடி மற்றும் 4.08 கோடி என்ற அளவில் அதி­க­ரித்­துள்­ளன. சென்ற ஆகஸ்டில், வீடி­யோகான் நிறு­வ­னத்தில், 1.96 லட்சம் சந்­தா­தா­ரர்கள் புதி­தாக இணைந்­துள்­ள­தை­ய­டுத்து, மொத்த வாடிக்­கை­யா­ளர்கள் எண்­ணிக்கை, 58.34 லட்­ச­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது.
மேலும், பொதுத் துறையைச் சேர்ந்த எம்.டி.என்.எல்., நிறு­வ­னமும், 10,017 வாடிக்­கை­யா­ளர்­களை புதி­தாக இணைத்து கொண்­ட­தை­ய­டுத்து, மொத்த சந்­தா­தாரர் எண்­ணிக்கை, 32.93 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது என, சி.ஓ.ஏ.ஐ., மேலும் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)