இந்­தி­யாவின் உருக்குஉற்­பத்தி 70 லட்சம் டன்இந்­தி­யாவின் உருக்குஉற்­பத்தி 70 லட்சம் டன் ... நறு­மண பொருட்கள் ஏற்­று­மதி ரூ.4,339 கோடியை எட்­டி­யது நறு­மண பொருட்கள் ஏற்­று­மதி ரூ.4,339 கோடியை எட்­டி­யது ...
இந்­தி­யாவின் உருக்குஉற்­பத்தி 70 லட்சம் டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2014
01:12

புது­டில்லி:இந்­தி­யாவின் உருக்கு உற்­பத்தி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 70 லட்சம் டன் என்ற அளவில் உள்­ளது.
மேலும், சர்­வ­தேச அளவில், உருக்கு உற்­பத்தி சரா­ச­ரி­யாக, மதிப்­பீட்டு மாதத்தில், 1.4 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 13.50 கோடி டன்­னாக உயர்ந்­துள்­ளது என, உலக உருக்கு கூட்­ட­மைப்பு (டபிள்யூ.எஸ்.ஏ.,) தெரி­வித்­துள்­ளது.பல முன்­னணி இந்­திய நிறு­வ­னங்­களின் உருக்கு உற்­பத்தி, கணக்­கீட்டு மாதத்தில், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு அதி­க­ரித்­துள்­ளது.
அதே­ச­மயம், சீனாவில் இதன் உற்­பத்தி குறைந்­ததால், சர்­வ­தேச சரா­சரி உருக்கு உற்­பத்தி அளவு சுணக்கம் கண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சீனாவின் உருக்கு உற்­பத்தி, 6.90 கோடி டன்­னாக உயர்ந்­துள்­ளது. இது, கடந்­தாண்டு இதே மாதத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட உற்­பத்­தி­யுடன் (6.82 கோடி டன்) ஒப்­பி­டு­கையில், 1 சத­வீதம் மட்­டுமே அதி­க­மாகும் என, டபிள்யூ.எஸ்.ஏ., தெரி­வித்­துள்­ளது.நடப்­பாண்டு ஜன­வரி முதல் ஆகஸ்ட் வரை­யி­லான எட்டு மாத காலத்தில், சர்­வ­தேச அளவில், உருக்கு உற்­பத்தி சரா­சரி அள­வாக, 2.4 சத­வீதம் என்ற அளவில் உள்­ளது. இதே காலத்தில், இந்­தி­யாவில் இதன் சரா­சரி, 1.8 சத­வீதம் என்ற அளவில் உள்­ளது.
மதிப்­பீட்டு காலத்தில், உலக நாடு­களின் உருக்கு உற்­பத்தி, 109.60 கோடி டன்­னாக உள்­ளது. இதில், இந்­தியா மற்றும் சீனாவின் பங்­க­ளிப்பு முறையே, 5.60 கோடி டன் மற்றும் 55 கோடி டன் என்ற அளவில் உள்­ளது.கணக்­கீட்டு காலத்தில், சர்­வ­தேச உருக்கு உற்­பத்­தியில், இந்­தியா தொடர்ந்து நான்­கா­வது இடத்தை தக்­க­வைத்து கொண்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 28,2014
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)