பதிவு செய்த நாள்
28 செப்2014
23:41

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில், பாமாயில் டின்னுக்கு, 10 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆனால், சர்க்கரை மூடைக்கு, 20 ரூபாய் குறைந்து உள்ளது.விருதுநகர் எண்ணெய் மார்க்கெட்டில், கடந்த வாரத்தைப் போலவே, கடலை எண்ணெய் (15 கிலோ டின்), 1,500; நல்லெண்ணெய், 3,200; சன்பிளவர் எண்ணெய், 1,150 ரூபாயாக உள்ளது.பாமாயில், டின்னுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 905 ரூபாயாக உள்ளது. சர்க்கரை மூட்டைக்கு (100 கிலோ), 20 ரூபாய் குறைந்து, 3,160 ரூபாயாக உள்ளது. 90 கிலோ மைதா, 3,045க்கும், 90 கிலோ ரவை, 3,065 ரூபாய்க்கும் விற்பனையானது. 55 கிலோ பொரிகடலை, 2,510 ரூபாயாக உள்ளது.நாட்டு வத்தல், வரத்து இல்லை. 100 கிலோ, ஆந்திரா குண்டூர் வத்தல், 8,100 ரூபாய் முதல் 8,400 ரூபாய் வரை விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|