அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடுஅன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு ... ஆறு மாதங்களில் இல்லாத அளவில்ரூபாய் மதிப்பு சரிவு ஆறு மாதங்களில் இல்லாத அளவில்ரூபாய் மதிப்பு சரிவு ...
சீரான விதை நடவிற்காக உருண்டை வடிவ விதைகள் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
00:05

மதுரை: ‘‘சீரான விதை நடவிற்காக நீலப்பச்சைப் பாசிகள் மற்றும் நுண்ணுயிரிகளால் ஊட்டம் பெற்ற உருண்டை வடிவ விதைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன,’’ என, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.இதுகுறித்து, மதுரை விவசாயக் கல்லுாரியில் அவர் மேலும் கூறியதாவது:நீலப்பச்சை பாசிகள், 25 ஆண்டுகளாக விவசாயத்திற்கு பயன்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அவற்றின் பயன்பாடு குறைந்துள்ளது.விதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், இயந்திர நடவு என்பது சிலநேரங்களில் சாத்தியமில்லாதது.
அதே நேரத்தில் தரமான விதைகள் என சான்றளிக்கப்பட்டாலும், அவை 80 சதவீத அளவே முளைப்புத் திறன் பெற்றுள்ளன.விதைகளின் முளைப்புத்திறனை, 100 சதவீதமாக்கவும், சீரான விதை நடவிற்காகவும், பல்கலை விதை மையம் சார்பில், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீலப்பச்சைப் பாசிகளுடன் சூடோமோனஸ், ட்ரைகோடெர்மா, அசோஸ்பைரில்லம் ஆகிய நுண்ணுயிரிகள், தேவையான நோய் எதிர்ப்பு பூச்சிக்கொல்லி கலந்து விதைகளின் மீது தடவி உருண்டை வடிவ விதைகளை உருவாக்குகிறோம்.இவற்றை இயந்திரத்தில் செலுத்தும் போது, நடவு ஒரே சீராக இருக்கும். விதைகளின் பயன்பாடு, 50 சதவீத அளவு குறைந்து விடும். வளர்ச்சி சீராக இருப்பதால், அறுவடையும் இயந்திரத்தின் மூலம் ஒரே நேரத்தில் சாத்தியமாகும்.தற்போது எள், மிளகாய், தக்காளி, கத்தரி காய்கறிப் பயிர்களில் உருண்டை விதைகளை உருவாக்கியுள்ளோம்.
விரைவில் பருத்தி விதை தயாராக உள்ளது. மேலும், சிறுதானிய விதைகளை இம்முறையில் உருவாக்க ஆராய்ச்சிகள் நடக்கின்றன. சிறுதானிய விதை உற்பத்தி சாத்தியமானால் வறட்சியைத் தாங்கி, நோய் எதிர்ப்பு சக்தியுடன், இவை வளரும்.இத்தொழில்நுட்பம் மாவட்ட வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக கற்றுத்தரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை இதுவரை காணாத விலை உச்சமாக, கிராம் ரூ.4 ஆயிரமும், சவரன் ரூ.32 ஆயிரத்தையும் தாண்டியது.சென்னை ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜனவரி மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக, வாகன முகவர்கள் ... மேலும்
business news
புதுடில்லி : மொபைல் போன் மீதான, ஜி.எஸ்.டி.,யை அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என, முக்கியமான அனைத்து ... மேலும்
business news
சென்னை : எல்., அண்டு டி., குழுமம், அதன் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதமாக, சென்னையில் உள்ள அதன் ... மேலும்
business news
புதுடில்லி : ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, மார்ச் 2ம் தேதி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)