ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.136 உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.136 உயர்வு ... பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதம்: ஐ.எம்.எப்., பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதம்: ஐ.எம்.எப்., ...
அண்டை நாடுகளுக்கான பொறியியல் சாதன ஏற்றுமதி சூடுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2014
01:21

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாத காலத்தில், இலங்கை, நேபாளம், வங்க தேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கான, இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி சூடுபிடித்துள்ளது என, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.
அமெரிக்காகணக்கீட்டு காலத்தில், இந்திய பொறியியல் சாதன ஏற்றுமதி டாப் 25 நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும், ஐக்கிய அரபு நாடுகள் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதையடுத்து, தெற்காசிய நாடான இலங்கை, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
பாகிஸ்தான் தவிர்த்து, வளர்ந்து வரும் இதர தெற்காசிய நாடுகள், இந்திய பொறியியல் சாதன ஏற்றுமதிக்கு, முக்கிய சந்தைகளாக உள்ளன.பொருளாதார ரீதியில் சிறிய பலம் கொண்டதாக இருப்பினும், மேற்கண்ட நாடுகளுக்கான பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது என, இ.இ.பி.சி.,–ன் தலைவர் அனுபம் ஷா தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், இலங்கைக்கு, 153 கோடி டாலர் (9,180 கோடி ரூபாய்) மதிப்பிற்கு பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 96.80 சதவீதம் அதிகமாகும்.
நேபாளம்இதேபோன்று, நேபாளத்திற்கான ஏற்றுமதி, 49.21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 59.57 கோடி டாலராகவும், வங்கதேசத்திற்கான ஏற்றுமதி, 25.29 சதவீதம் உயர்ந்து, 61.59 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளன.ஒட்டு மொத்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில், டாப் 25 நாடுகளின் பங்களிப்பு, 74 சதவீதமாக உள்ளது.
கடந்த 2013–14ம் நிதியாண்டில், 6,200 கோடி டாலராக இருந்த இந்நாடுகளுக்கான ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 7,000 கோடி டாலரை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதனை எடுத்துக் காட்டும் வகையில்,நாட்டின் பொறியியல் சாதனங்கள் மொத்த ஏற்றுமதி,நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில்,24 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,890 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதில், டாப் 25 நாடுகளின் பங்களிப்பு, 29.42 சதவீதம் உயர்ந்து, 2,132 கோடி டாலராக உள்ளது என, இ.இ.பி.சி., மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)