ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் - ரூ.61.05ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் - ரூ.61.05 ... தங்கம் விலை ரூ.32 குறைந்தது தங்கம் விலை ரூ.32 குறைந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய அறிமுகம் ‘சியாஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2014
10:41

மாருதி சுசூகி நிறுவனம், இந்தி யாவில், கார் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம், ஏற்கனவே, ‘ஆல்டோ, ரிட்ஸ், செலிரியோ, ஏ – ஸ்டார், ஸ்விப்ட், வேகன்ஆர், ஜென், டிசைர், கிசாகி, எஸ்எக்ஸ்4, எகோ, ஓம்னி, எர்டிகா மற்றும் கிரான்ட் விடாரா’ ஆகிய மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது, ‘சியாஸ்’ என்ற பெயரில், புதிய காரை அறிமுகப்படுத்தி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளிலும் இந்த கார் கிடைக்கும். கூடுதல் இட வசதி, கூடுதல் பாதுகாப்பு, எரிபொரும் சிக்கனத்தில் புதிய நடைமுறை உள்ளிட் பல அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.
இந்த காரின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* பெட்ரோல் காரில், கே14 விவிடி 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்(1373 சிசி திறன் – சக்தி 92.45@6000 -– டர்க் 130@4000) பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார், லிட்டருக்கு, 20.73 கி.மீ., மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* டீசல் காரில், டீடீஐஎஸ்200 – 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்(1248 சிசி திறன் – சக்தி 90@4000 - டர்க் 200@1750) பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார், லிட்டருக்கு, 26.21 கி.மீ., மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த கார் மாடலை மேம்படுத்த, 620 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
* ரிவர்ஸ் கார் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள்.
* சாவி இல்லாமல், புஷ் பட்டன் மூலம், காரை இயக்கும் வசதி.
* எலக்ட்ரிக் முறையில், கார் டிக்கியை திறக்கும் வசதி.
* காரை ஸ்டார்ட் செய்த உடனேயே, ‘ஏசி’ வசதி கிடைக்கும்.
* கால் வைக்கும் பகுதியில் விளக்கு வசதி.
* பின்புற இருக்கை பகுதியில், ‘ஏசி’
* புரஜக்டர் முகப்பு விளக்குகள்
* ஸ்டியரிங் பகுதியிலேயே, ஆடியோ சிஸ்டத்தின் கன்ட்ரோல் வசதி, மொபைல் போன் அழைப்பை கையாளும் வசதி.
* பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில், தலா, நான்கு வகைகளில், மேன்யுவல் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது.
* பெட்ரோல் காரில், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியில், இரண்டு வகைகள் கிடைக்கும்.
* ஏழு வண்ணங்களில், ‘சியாஸ்’ கார் விற்பனைக்கு வந்து உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)