பதிவு செய்த நாள்
11 அக்2014
01:16

புதுடில்லி :சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என, பிரதமருக்கு, எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்.இ.ஏ.,) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, எஸ்.இ.ஏ., எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:சமையல் எண்ணெய் மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில், எண்ணெய் வித்துக்கள் விலை, வரலாறு காணாத அளவில் சரிவடைந்துள்ளது.தற்போதைய நிலையில், கச்சா தாவர எண்ணெய் இறக்குமதி வரியை, 2.5 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்க்கான இறக்குமதி வரியை, 10 சதவீதத்திலிருந்து, 25 சதவீதமாகவும் அதிகரிக்க வேண்டும்.
இதனால், விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுவதோடு, அடுத்த கரீப் பருவத்தில், அவர்கள் அறுவடை செய்யும் பயிர்களுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மலேசியா, கையிருப்பை குறைக்கும் வகையில், பாமாயிலுக்கான ஏற்றுமதி வரியை முழுவதுமாக ரத்து செய்துள்ளது. இதே போன்று, இந்தோனேஷியாவும், தற்போது, இதன் ஏற்றுமதி வரியை, 9 சதவீதம் என்ற அளவிலிருந்து, 0 சதவீதமாக குறைத்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், சர்வ தேச சந்தையில், தாவர எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
இதன் காரணமாக, அடுத்த இரண்டு மாதங்களில், நாட்டின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி, 1.15 கோடி டன்னை தாண்ட வாய்ப்புள்ளது என, எஸ்.இ.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|