பதிவு செய்த நாள்
11 அக்2014
01:23

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,), ரயில்வே துறையின் வருவாய், 12.02 சதவீதம் வளர்ச்சி கண்டு, 73,404 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 65,526 கோடி ரூபாயாக இருந்தது என, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட மொத்த வருவாயில், சரக்கு போக்குவரத்தின் மூலம் ஈட்டப்பட்ட வருவாய், 10.44 சதவீதம் அதிகரித்து, 44,162 கோடியிலிருந்து, 48,772 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதே போன்று, பயணிகள் வாயிலான வருவாயும், 16.46 சதவீதம் உயர்ந்து, 18,100 கோடியிலிருந்து, 21,079 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதர இனங்கள் வாயிலான வருவாயும், 7.01 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,850 கோடியிலிருந்து, 1,980 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், மதிப்பீட்டு காலத்தில், பயணச்சீட்டுகள் விற்பனை, 0.06 சதவீதம் குறைந்து, 425.58 கோடியிலிருந்து, 425.33 கோடியாக சரிவடைந்துள்ளது என, புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|