பதிவு செய்த நாள்
12 அக்2014
01:18

மும்பை :கடந்த, 2011ம் ஆண்டிற்கு பின், நடப்பாண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் (ஜன.,–செப்.,), உள்நாட்டு நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, அதிகபட்சமாக, 1.56 லட்சம் கோடி ரூபாயை (2,610 கோடி டாலர்) எட்டியுள்ளது.இது, கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 16.5 சதவீதம் அதிகமாகும்.இதற்கு முன், கடந்த, 2011ம் ஆண்டு, முதல் ஒன்பது மாத காலங்களில், உள்நாட்டு நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, அதிகபட்சமாக, 2.07 லட்சம் கோடி ரூபாயை (3,450 கோடி டாலர்) எட்டியிருந்தது.கணக்கீட்டு காலத்தில், இணைத்தல் – கையகப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தங்களில், மருந்து துறை, 23.2 சதவீத பங்களிப்புடன் (610 கோடி டாலர்) முதலிடத்தில் உள்ளது. எரிசக்தி, மின் துறை, தகவல்தொழில்நுட்பம், ஊடகம், தொலைத்தொடர்பு உள்ளிட்டவை, அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|